பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் –...!

Tuesday 26 February 2013

பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்...!


பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்...!

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க.



 முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.

ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம்.

 அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.

 நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியது தான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.
http://download.cnet.com/Who-Is-On-My-Wifi/3000-18508_4-75179802.html

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday 12 February 2013

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய Keyboard Shortcuts

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய Keyboard Shortcuts


Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் நாம் அறிந்திருக்க வேண்டிய 35 - Keyboard Shortcuts பார்ப்போம்.

Ctrl+N   புதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+T    புதிய Tab ஓபன் செய்ய
Ctrl+O   குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+T        கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9    கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDown              அடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp        முந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + W               தற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4             தற்போதைய tab அல்லது pop-up Close செய்ய.
Backspace           முந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+Backspace               Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home           Home Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10       Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+B        Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+H   History page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J     Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+Esc              Task Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6    URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+J         Developer Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+Delete             Clear Browsing Data – வை ஓபன் செய்ய
F1           Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+D   URL Highlight செய்ய
Ctrl+P    தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+S    தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R         Refresh செய்ய
Esc          Loading – ஐ நிறுத்த
Ctrl+F    find bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+U   தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+D   குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+D       ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11         Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar            பக்கத்தை Scroll down செய்ய
Home    பக்கத்தின் Top க்கு செல்ல
End        பக்கத்தின் Bottom க்கு செல்ல

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்