பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் –...!

Sunday 30 December 2012

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க


இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!
இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியேபுகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்!
ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்?
ஜிமெயிலில் பழைய மெயில்களை தேடும் வசதி இருப்பதால் கடந்த கால மெயில்களில் தேடிப்பார்க்கலாம்.இருந்தாலும் ஒவொரு மெயிலாக தேடி அதில் புகைப்படம் இருக்கிறதா என்று பார்த்து அவற்றை சேமித்து வைப்பது என்பது தலை சுற்ற வைத்துவிடும் தான்.
இப்படி இமெயிலில் புதைந்த பழைய புகைப்படங்களை தேடி எடுக்கும் எண்ணமோ தேவையோ ஏற்பட்டால் உதவுவதற்காக என்றே ஒரு இணையசேவை உருவாக்கப்பட்டுள்ளது.
லாஸ்ட்போட்டோஸ் என்னும் பெயரிலான அந்த சேவை இமெயில் தொலைந்த புகைப்படங்களை மீண்டும் தேடி எடுக்க உதவுகிறது.
வின்டோஸ் சார்ந்த செயலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையை லாஸ்ட்போட்டோஸ் தளத்தில் இருந்து டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டு பாஸ்வேர்டையும் குறிப்பிட்டு உள்ளே நுழைய அனுமதித்தால் இந்த சேவை கடந்த கால இமெயில்களில் அனுப்பிய மற்றும் வந்து சேர்ந்த புகைப்படங்களை எல்லாம் தேடி எடுத்து அழகாக தொகுத்து தந்து விடும்.
சில புகைப்படங்கள் அளவில் சின்னதாக,தம்ப்நைலாக மட்டுமே இருக்கும்.அத்தகைய புகைப்படங்களை தேட வேண்டாம் என்று வடிக்கட்டச்சொல்லும் வசதியும் இருக்கிறது.அதே போல குறிப்பிட்ட வடிவிலான புகைப்பட கோப்புகள் தேவை இல்லை என்றோ குறிப்பிட்ட காலத்திற்கு முன் வந்த படங்கள் தேவை இல்லை என்றோ வடிக்கட்டிக்கொள்ளலாம்.
புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் போதோ அந்த படங்கள் உங்கள் டெஸ்க்டாப்பிலும் காண்பிக்கப்படும்.
அந்த படங்களை அப்படியே கிளிக் செய்து பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற சேவைகள் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கும் டிவிட்டரும் இப்போது தானே பிரபலமாகி இருக்கின்றன.பேஸ்புக் வருவதற்கு முன் இமெயிலில் தானே பெரும்பாலும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருப்போம்.அப்படி பகிர்ந்து கொண்டு மறந்து விட்ட படங்களை இப்போது தேடி எடுத்து பேஸ்புக்கில் பகிர்வது அருமையானது தானே.
இந்த புகைப்படங்கள் எல்லாம் உங்கள் டெஸ்க்டாப்பிலும் சேமித்து வைக்கப்படும்.அவற்றை அழகாக கோப்புகளில் பிரித்து வைத்துக்கொள்ளலாம்.
ஜிமெயில் உட்பட பல்வேறு இமெயில் கணக்குகளில் இந்த சேவை செயல்படுகிறது.
இமெயிலில் அனுப்பிய புகைப்படங்களை மீட்டெடுக்க விரும்புகிறவ‌ர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.அதே போல புகைப்படங்கள் வாயிலாக கடந்த கால நினைவில் மூழ்க நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படங்களை மீட்டெடுப்பதோடு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் கைகொடுப்பது இந்த சேவையின் சிறப்பம்சம்.
புகைப்படம் சார்ந்த சேவைகளில் மேலும் ஒரு பயனுள்ள சேவை.
இணையதள முகவரி;http://lostphotosapp.com/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday 9 December 2012

சிறுவர்களுக்கான நவீன பாதுகாப்பான தேடியந்திரங்கள்


இன்றைய நவீன காலகட்டத்தில் 6 வயது முதலே இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
எனவே சிறுவர்களுக்கு ஏற்றாற் வகையில், பல தேடியந்திரங்கள் உள்ளன.

Aga-Kids

இந்த தேடியந்திரம் கொஞ்சம் விஷுவலானது. அதாவது படங்களாக தகவல்கள் தேவையா என்றும் தீர்மானித்து கொள்ளலாம்.

தேடுவதற்கு முன்பே தவல்கள் சாதாரணமாக தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாக (விஷுவலாக)தோன்ற வேண்டுமா என தெரிவு செய்து கொள்ளலாம்.

இதை தவிர கார்ட்டூன், விளையாட்டுகள், பொம்மை செய்தல் ஆகிய தனிப்பகுதிகளும் இருக்கின்றன. இணையத்திலேயே வரைவதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது.

அது மட்டும் அல்ல தேட கட்டத்திற்கு மேலேயே பல குறிச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.

http://aga-kids.com/

Kidrex.org

இதே போலவே கிட்ரெக்ஸ்.ஆர்ஜி என்னும் தேடியந்திரம் அழகான டைனசோர் படத்தோடு வரவேற்கிறது.

இந்த தேடியந்திரம் கூகுளை பயன்படுத்தி சுட்டீஸ்களுக்கு பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது.

இதில் குழந்தைகளுக்கு என்று தனிப்பகுதியும் பெற்றோர்களுக்கு என்று தனிப்பகுதியும் இருக்கிறது.

குழந்தைகளுக்கான பகுதியை கிளிக் செய்தால் குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களை பார்க்கலாம்.

http://www.kidrex.org/

KidsClick.org

கிஸ்கிளிக்.ஆர்ஜி தேடியந்திரம் சிறுவர்களுக்காக என்று நூலகர்களால் உருவாக்கப்பட்டது. எனவே ஹோம் ஒர்கிற்கு தேவையான தகவல்களை இதில் தைரியமாக தேடலாம்.

http://kidsclick.org/

Ask Kids

ஆஸ்க்கிட்ஸ் தேடியந்திரத்தில் எந்த சந்தேகத்தையும் கேள்வியாக கேட்டு தேடலாம். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கான பதில்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம்.

http://www.askkids.com/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Disk Cleaner மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


Disk Cleaner மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


தொடர்ச்சியான கணனிப் பாவனையின் மூலம் வன்றட்டில் பல்வேறு வகையான பாவனைக்கு வேண்டப்படாத கோப்புக்கள் தங்குகின்றன.
இதனால் வன்றட்டின் செயற்படு வேகம் குறைவடைந்து கணனியின் வேகமும் மந்தநிலையை அடைகின்றது
.

இதனை தவிர்க்கும் பொருட்டு வன்றட்டில் காணப்படும் வேண்டப்படாத கோப்புக்களை நீக்குவதற்காக வெவ்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

அவற்றுள் Disk Cleaner மென்பொருளும் ஒன்றாகும். 805 KB கோப்பு அளவு கொண்ட இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் இதில் Portable பதிப்பும் கிடைக்கின்றது.

இதன் மூலம் Firefox, Chrome, Internet Explorer, 7-Zip, Flash Player ஆகியவற்றில் உள்ள தற்காலிக கோப்புக்களை நீக்க முடிவதுடன் தேவையற்ற கோப்புறைகளையும் நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தரவிறக்க சுட்டி..
http://garr.dl.sourceforge.net/project/portableapps/Disk%20Cleaner%20Portable/DiskCleanerPortable_1.7.1645_English.paf.exe

தரவிறக்க சுட்டி...
http://citylan.dl.sourceforge.net/project/dclean/dclean/1.8.1795/dcsetup_1.8.1795.exe

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday 1 December 2012

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்