பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் –...!

Sunday 27 January 2013

HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?


HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.







இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday 19 January 2013

உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்.


உலகின் சிறந்த 25 ‘ஐடிகம்பெனிகள்...

ஐடிபெரும்பாலான இளைய சமுதாயத்தினரின் இதயத்துடிப்பு. ஐடிஇல்லையென்றால் எதுவும் இல்லையென்ற நினைப்புவேறு. கண்டிப்பான உண்மைதான். அனைத்து தொழிலிலும் ஐடிமாயம் பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உலகில் பல்வேறு ஐடிசார்ந்த மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சிறந்ததென ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின் சாராம்சம் இங்கே தரப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 25 ‘ஐடிகம்பெனிகள்

1. Microsoft
2. IBM
3. Oracle
4. SAP
5. Ericsson
6. Hewlett Packard
7. Symantec
8. Nintendo
9. Activision Blizzard
10. EMC
11. Nokia Siemens Networks
12. CA
13. Electronic Arts
14. Adobe
15. Alcatel-Lucent
16. Cisco
17. Sony
18. Hitachi
19. Dassault
20. BMC
21. SunGard
22. Autodesk
23. Konami
24. Salesforce.com
25. Sage

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



கற்பழிப்பிலிருந்து காப்பாற்ற புதிய மொபைல் அப்ளிகேஷன்


கற்பழிப்பிலிருந்து காப்பாற்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் 'Me against Rape'

புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல் எண் 100க்கு தொலைபேச முயன்றுள்ளார், ஆனால் அதற்க்குள் அவரது கைபேசியை பிடுங்கிவிட்டதால் காவல்துறைக்கு தகவல் கொடுக்க இயலவில்லை.

இந்த புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒரே ஒரு கிளிக்கில் பல்வேறு விசயங்களை செய்துவிடும்.

1) ஏற்கனவே பதியப்பட்ட செய்தியை குறுந்தகவலாக முன்னரே பதியப்பட்ட எண்ணுக்கு அனுப்பலாம்
2) ஏற்கனவே பதியப்பட்ட குறிப்பிட்ட எண்களை அழைக்கலாம்
3) நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யலாம்
4) கூகிள் மேப்புடன் இணைக்கப்பட்டு இந்த மொபைல் போன் பயன்படுத்துபவர் சென்ற‌ இடங்களையெல்லாம் பதிவு செய்யலாம், இதனை ஆதாரமாக கொள்ளலாம்.

இதை அனுப் உன்னிகிருஷ்ணன்(24), குணவத் (23) ஜெயேஷ் (23) என்ற மூன்று பேர் உருவாக்கியுள்ளனர்.

இந்த அப்ளிகேசனை இங்கே டவுன்லோட் செய்யலாம்

இந்த அப்ளிகேஷன் அனைவருக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள், பிடிச்சிருந்தா லைக்குங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்