பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் –...!

Wednesday 22 February 2012

VIRUS ன் விரிவாக்கம் (GK)

பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான முதல் ஹார்ட் டிஸ்க்கினை 1979 ஆம் ஆண்டு முதன் முதலாக ஸி கேட்( Seagate ) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் கொள்ளளவு 5 எம்.பி.( MB )

முதன் முதலில் தங்களுக்கென ஓர் இணையதளப் பெயருக்கு விண்ணப்பித்தவர்கள் டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன்(digital equipment corporation) ஆகும்.

ஐ.பி.எம் பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த 12 பொறியாளர்களை என்ன குறியீட்டுப் பெயர் கொண்டு அழைத்தார்கள் தெரியுமா? ‘தி டர்ட்டி டஜன்’ ( The Dirty Dozen )

VIRUS ன் விரிவாக்கம்
Vital Information Resource Under Siege

SIM  ன் விரிவாக்கம் ( Sim card சொல்வோமே அதுதான் Simran இல்லப்பா.. )
Subscriber Identify Module

CD-ROM ன் விரிவாக்கம்
Compact Disk-Read Only Memory

ANSI ன் விரிவாக்கம்
American National Standards Institute

ASCII ன் விரிவாக்கம்
American Standard Code for Information Interchange

ATM ன் விரிவாக்கம்
Automated Teller Machine

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!!

என்ன யோசிக்கிறிங்க..??
மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!! அப்படினு யோசிக்கிறிங்களா? அப்படி யோசிச்சிங்கனா..இங்க போங்க..
போயி மொபைல் நம்பரின் முதல் நான்கு நம்பர்களை வைத்து தேடி கண்டுபிடிச்சுக்கோங்க..
CLICK HERE
சரிதானே..?

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Sunday 12 February 2012

யு டியூப் காணொளியை வேகமாக பார்வையிட…

யு டியூப் (You Tube) இல் காணொளி கண்டுகளிக்காதவா் யார் தான் உண்டு? அப்படி காணொளி ஒன்றை பார்வையிடும் போது பல நேரங்களில் அதனைத் திறந்து முற்றாக பார்வையிடுவதற்குள் போதுமென்றாகிவிடும். Buffering செய்து காணொளியை பார்வையிடுவதில் உங்கள் இணைய வேகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இணைய வேகம் குறைவெனில் Buffering செய்வதற்குள் விடிந்தே விடும்.

வேகமாக பார்வையிட வழி என்ன? (அதாவது இணைய வேகம் குறைந்த கணினிகளில்.)
இதற்கு நீங்கள் கைத் தொலைபேசிகளுக்குரிய யு டியூப் பதிப்பை திறந்து காட்சித் தெளிவு குறைந்த காணொளிகளை பார்வையிடலாம். இந்தக் காணொளிகள் தெளிவு குறைவு என்பதுடன் தரம் குறைவானதுமாகும். மற்றும் படி காணொளிகளில் வித்தியாசம் எதுவுமில்லை.
சரி இதற்கு என்ன செய்யலாம்?
  • உங்கள் இணைய உலாவியில் m.youtube.com  என்பதை திறந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் காணவிரும்பும் காணொளியைத் தேடுங்கள்.
  • பார்க்க விரும்பும் காணொளியை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் Watch Video என்ற இணைப்பு தோன்றும். அதனை வலது கிளிக் செய்து இணைப்பு முகவரியை பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்.
image
  • பின் VLC Player ஐ திறந்து கொள்ளுங்கள். (VLC Player நிறுவியிருத்தல் வேண்டும்.) அதில் Media—> Open Network Stream… என்ற கட்டளையை செயற்படுத்தி Please enter a network URL: என்பதில் நீங்கள் ஏற்கனவே பிரதி எடுத்த முகவரியை ஒட்டி விடுங்கள்.
image
  • இறுதியாக Play என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் எந்த வித காத்திருத்தலும் இன்றி காணொளியை கண்டு களிக்கலாம்.
மேலே சொன்னது போல VLC Player இல்லாவிடின் Real Player அல்லது Quick Time Player இருந்தால் அதில் காணொளியை கண்டு களிக்கலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

பின்னூட்டல்களை திரட்டுதல்

நீங்கள் ஒரு வலைப் பூவை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வலைப் பூவை பலரும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். அப்படி வருபவர்களில் சிலர் பின்னூட்டலும் இட்டுச் செல்வார்கள். உங்கள் வலைப் பூவில் மற்றவர்களால் இடப்பட்ட பின்னூட்டல்களை தொகுத்து உங்கள் வலைப் பூவின் Side Bar/Body இல் வெளியிடுவது எப்படி? அது சம்பந்தமான தகவல்களை திரட்டித் தருகிறது இந்தப் பதிவு.
தனியாக பின்னூட்டல்களை திரட்டுவதன் அவசியம் என்ன?
  • நீங்கள் ஒரு பதிவை இணைத்த பின் தளத்திற்கு வருபவர்களில் சிலர் உங்கள் பதிவுக்கு யாரும் பின்னுட்டல் போட்டிருக்கிறார்களா என்று பார்த்த பின்னர் தான் அந்தப் பதிவில் ஏதோ இருக்கிறது என்று படிக்கத் தொடங்குவார்கள்.
  • மற்றவர்களால் இடப்பட்ட பின்னூட்டல்களை தொகுத்து வழங்குவதன் மூலம் அவர்கள் பெயரும் அதில் வருவதால் தொடர்ந்து பின்னூட்டல் இடுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
  • உங்களை நீங்களே மறைமுகமாக தட்டிக் கொடுக்க. ;-)
முதலில்...
இதில் நாங்கள் பார்ப்பது Google Blogger ஐ சேவை நிறுவனமாக கொண்டர்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் பதிவுகள் மற்றும் பின்னூட்டல்கள் வெவ்வேறு ஓடைகளில்(Feed) திரட்டப்படும்.
உதாரணத்திற்கு உங்கள் பதிவுகள் திரட்டப்படும் ஓடையின் பொது முகவரி :
http://உங்கள்வலைப்பூவின்பெயர்.blogspot.com/feeds/posts/default
அது போலவே உங்கள் வலைப் பூவின் பின்னூட்டல்கள் திரட்டப்படும் ஓடையின் பொது முகவரி :
http://உங்கள்வலைப்பூவின்பெயர்/feeds/comments/default
மேற்குறிப்பிடப்பட்ட பொது முகவரிகளில் உங்கள் வலைப் பூ பெயரை மாற்றீடு செய்து வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
[குறிப்பு : நீங்கள் உங்கள் வலைப் பூவிற்கான மேலாண்மைப் பகுதியில் (Settings) Site Feed என்ற பகுதியில் இருக்கக்கூடிய Allow Blog Feeds என்ற தெரிவுப் பெட்டியில் Full அல்லது Short என்பதை தெரிவு செய்திருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.]
திரட்டும் முறைகள் :
இரண்டு முறைகளில் இதனைச் செய்யலாம்.
  1. Blogger இல் உள்ளமைந்த வசதியைப் பயன்படுத்தல் - இலகுவானது.
  2. ஓடைகளை (Feeds) திரட்டுபவர்களின் சேவையை பெற்றுக் கொள்ளல்.
திரட்டும் முறை : Blogger இல் உள்ளமைந்த வசதியைப் பயன்படுத்தல்
  • Template என்ற பகுதிக்குச் சென்று "Add a Page Element" என்பதை தெரிவு செய்யவும்.
comment1
  • பின் வரக்கூடிய சாளரத்தில் (Window) Feed என்ற பகுதிக்கு கீழ் உள்ள ADD TO BLOG என்பதை அழுத்தவும்.
comment2
  • அழுத்தியவுடன் வரும் சாளரத்தில் Feed URL என்கின்ற பெட்டியினுள் (Text Box) உங்கள் பின்னூட்டல்களின் ஓடையை தட்டச்சு செய்க அல்லது பிரதியெடுத்து ஒட்டவும். (Copy & Paste) CONTINUE என்ற பொத்தானை அழுத்தவும்.
  • அதன் பின் வருகின்ற ஒழுங்கமைக்கும் பகுதியில் (Configure Feed) உங்களுக்கு வேண்டிய தரவுகளை தரவும்.
  • SAVE CHANGES ஐ அழுத்தவும்
அவ்வளவே... (உங்கள் Side bar இல் திரட்டப்பட்ட பின்னூட்டல்கள் வந்திருக்கும்.  5 பின்னூட்டல்கள் மட்டும் தான் என்பது ஒரு குறை)
மேல் சொல்லப்பட்டது வலைப் பூ முழுமைக்கானது. நீங்கள் ஒரே ஒரு பதிவின் பின்னூட்டல்களை மட்டும் திரட்டவிரும்பினால் ஓடையின் (Feed) இன் முகவரியில் மாத்திரம் மாற்றம் செய்தால் போதுமானது.
http://உங்கள்வலைப்பூவின்பெயர்/feeds/YourPOSTID/comments/default
Post ID ஐ பெறுவதற்கு Dash Board சென்று "Post" ஐ கிளிக் பண்ணுங்கள். எந்தப் பதிவின் பின்னூட்டல்களை திரட்டப் போகிறீர்களோ அந்தப் பதிவின் "Edit" ஐ கிளிக் செய்யவும். உங்கள் பதிவின் Post ID இற்கு பின்னுள்ள தொடரிலக்கத்தை பிரதி எடுத்து பயன்படுத்துங்கள். அதைத் தவிர மற்றைய படிமுறைகள் வழமையானவையே!
                                                                                   நன்றி

                                                          கவி ரூபன்

1001 இலவச எழுத்துருக்கள்!

இந்தப் பதிவின் நோக்கம் ஒரு இணையத் தளத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதாகும்.

எழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது 1001 எழுத்துருக்களை இலவசமாக வழங்குகின்றது. விண்டோஸ் மற்றும் மக்(Mac) இயங்குதளங்களில் இயங்கும்  வகையில் இந்த எழுத்துருக்கள் அமைகின்றன.
அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளதால் இலகுவாக வேண்டிய எழுத்துருவை கண்டுபிடித்து தரவிறக்கம் செய்யலாம். பல்வேறு வகைகளின் கீழ் பல எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அந்த இணையத்தளம் இது தான்
நீங்களும் ஒரு தரம் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய எழுத்துருக்களை இலவசமாக நீங்கள் தரவிறக்கலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

தெரிந்து கொள்ளவேண்டிய Google தந்திரங்கள்!

கூகிள்(Google) இணையத்தில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறிவிட்டது. இணையத்தில் அது எடுக்கும், எடுத்து நிற்கும் விஸ்வரூபம் மிகப்பெரியது. கூகிள் வழங்கும் சேவைகளான மின்னஞ்சல் (Gmail), யுடியூப் (You Tube) ஆகியன பரவலாகப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான கூகிள் வழங்கும் இணைய சேவைகளுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் பயன்மிக்க சில சிறப்பியல்புகளை(Features) சுட்டிக் காட்டுவது தான் இந்தப் பதிவின் நோக்கம்.
  • எல்லா வகையான கோப்புகளையும் (Files) இணைய மேலோடியினுள் (Browser) பார்வையிடல்.
Google Docs Viewer என்ற இணையப் பக்கதிற்கு சென்று நீங்கள் பார்வையிட விரும்பும் கோப்பின் முகவரியை தருவதன் மூலம் அதனைப் பார்வையிட முடியும். எந்தக் கோப்புகளைப் பார்வையிடலாம் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கு அழுத்துங்கள்.
image
பொதுவாக ஜிமெயிலில் உங்களுக்கு இணைப்புகள் (Attachments) அனுப்பப்பட்டிருப்பின் அவற்றை தரவிறக்காமல் பார்வையிடுவதற்கான வசதியை ஜிமெயில் வழங்குவதை பலரும் அறிந்திருக்கலாம். (படம் பார்க்க)
image
  • கோப்பு ஒன்றினை பார்வையிடுவதற்கான முகவரியை அனுப்புதல்
மேலே குறிப்பிடப்பட்ட Google Docs Viewer ஐ பயன்படுத்தி ஒரு கோப்பிற்கான முகவரியை உருவாக்கி அதனை மற்றவா்களோடு பகிர்வதன் மூலம் அவா்கள் அந்தக் கோப்பினை பார்வையிட முடியும்.
இதன் மூலம் உருவாக்கப்படும் முகவரி இவ்வாறு தொடங்கும்.
http://docs.google.com/viewer?url=
இதன் பின் பகுதியில் உண்மையில் பார்வையிட வேண்டிய கோப்பின் முகவரி இடம்பெறும்.
உதாரணமாக கோப்பின் முகவரி - http://rubicon73.tripod.com/sitebuildercontent/sitebuilderfiles/alyx_sig.psd (இது ஒரு Photoshop கோப்பு)
இதனை பார்வையிடுவதற்கான முழுமையான முகவரி
http://docs.google.com/viewer?url=http://rubicon73.tripod.com/sitebuildercontent/sitebuilderfiles/alyx_sig.psd
  • http இற்குப் பதிலாக https ஐ பயன்படுத்தி பாதுகாப்பாக கூகிளின் சேவைகளை பயன்படுத்தல்.
பொதுவாக கூகிளின் சேவைகளை http இற்கு “s” சோ்த்து பயன்படுத்த முடியும். உதாரணமாக மேலே சொல்லப்பட்ட Google Docs Viewer ஐ பயன்படுத்தும் போதுhttp://docs.google.com/viewer இற்குப் பதிலாக https://docs.google.com/viewer மூலம் இதனை அணுகலாம்.
ஜிமெயிலை பயன்படுத்தும் போது எப்போதும் https ஐ பயன்படுத்துமாறு மாற்றி அமைப்பதன் மூலம் பாதுகாப்பாக மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தலாம். இதனைச் செய்வதற்கு உங்கள் ஜிமெயிலின் Mail Settings சென்று Always use https என்பதைத் தெரிவு செய்யவும்.
image
  • உங்கள் மின்னஞ்சல்(அதாவது Gmail) எப்போது எங்கிருந்து எப்படி அணுகப்பட்டது என்று தெரிந்து கொள்ளுதல்
கடைசியாக உங்கள் Gmail எப்படி அணுகப்பட்டது என்று தெரிந்து கொள்ள Gmail ஐ திறந்து கீழே சென்று Details என்பதை கிளிக் செய்து கடைசி 10 முறை எவ்வாறு அணுகப்பட்டது என்று பார்க்கலாம்.  (ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அணுகல் இருப்பின் கடவுச்சொல்லை மாற்றிவிடுவது நல்லது.)
image
  • கூகிளின் சேவைகள் தடையின்றி இயங்குகின்றனவா என்று தெரிந்து கொள்ளல்
சில நேரங்களில் கூகிளின் சேவை ஒன்று ஒழுங்காக அல்லது முற்றாக வேலை செய்யாமல் எம்மை வெறுப்பிற்கு உள்ளாக்கும். கூகிளின் சேவைகள் வேலை செய்கிறதா என்று பார்க்க Google Apps Status Dashboard இற்குச் செல்லுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

முக புத்தகத்திற்கான குறுக்கு வழிகள்!

நீங்கள் விசைப் பலகையை பெரும்பாலும் பயன்படுத்துபவா் எனில், விசைப் பலகை குறுக்கு வழிகளை தெரிந்து வைத்திருத்தல் நல்லது. இந்தப் பதிவில் முகப் புத்தகத்தில் பயன்படுத்தக் கூடிய குறுக்கு வழிகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் குரோம் இ.உலாவி பயன்படுத்துபவா் எனில்,
Alt உடன் கீழ்க்காணும் குறுக்கு வழிகளை பயன்படுத்தலாம். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)
1 – home
2 – timeline/profile
3 – friends
4 – messages
5 – notifications
6 – general account settings
7 – privacy settings 
8 – முகப் புத்தகத்தின் facebook page
9 – legal terms
0 – help center
m – new messages
? – search
நெருப்பு நரி இ.உலாவி எனில், Shift + Alt உடன் மேற்காணும் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துங்கள். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)
இன்ரநெட் எஸ்புளோரா் 9 எனில், சில குறுக்கு வழிகள் மாத்திரமே செயற்படுகின்றன.(Alt+#,Enter)
Mac இயங்கு தளம் எனில்,
  • குரோம் – Control+Option+#
  • நெருப்பு நரி  - Control + #
  • சபாரி - Control+# 
பிறகென்ன விசைப் பலகை குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி அசத்துங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்