பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் –...!

Saturday, 19 January 2013

உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்.

உலகின் சிறந்த 25 ‘ஐடிகம்பெனிகள்...

ஐடிபெரும்பாலான இளைய சமுதாயத்தினரின் இதயத்துடிப்பு. ஐடிஇல்லையென்றால் எதுவும் இல்லையென்ற நினைப்புவேறு. கண்டிப்பான உண்மைதான். அனைத்து தொழிலிலும் ஐடிமாயம் பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உலகில் பல்வேறு ஐடிசார்ந்த மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சிறந்ததென ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின் சாராம்சம் இங்கே தரப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 25 ‘ஐடிகம்பெனிகள்

1. Microsoft
2. IBM
3. Oracle
4. SAP
5. Ericsson
6. Hewlett Packard
7. Symantec
8. Nintendo
9. Activision Blizzard
10. EMC
11. Nokia Siemens Networks
12. CA
13. Electronic Arts
14. Adobe
15. Alcatel-Lucent
16. Cisco
17. Sony
18. Hitachi
19. Dassault
20. BMC
21. SunGard
22. Autodesk
23. Konami
24. Salesforce.com
25. Sage

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

கற்பழிப்பிலிருந்து காப்பாற்ற புதிய மொபைல் அப்ளிகேஷன்

கற்பழிப்பிலிருந்து காப்பாற்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் 'Me against Rape'

புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல் எண் 100க்கு தொலைபேச முயன்றுள்ளார், ஆனால் அதற்க்குள் அவரது கைபேசியை பிடுங்கிவிட்டதால் காவல்துறைக்கு தகவல் கொடுக்க இயலவில்லை.

இந்த புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒரே ஒரு கிளிக்கில் பல்வேறு விசயங்களை செய்துவிடும்.

1) ஏற்கனவே பதியப்பட்ட செய்தியை குறுந்தகவலாக முன்னரே பதியப்பட்ட எண்ணுக்கு அனுப்பலாம்
2) ஏற்கனவே பதியப்பட்ட குறிப்பிட்ட எண்களை அழைக்கலாம்
3) நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யலாம்
4) கூகிள் மேப்புடன் இணைக்கப்பட்டு இந்த மொபைல் போன் பயன்படுத்துபவர் சென்ற‌ இடங்களையெல்லாம் பதிவு செய்யலாம், இதனை ஆதாரமாக கொள்ளலாம்.

இதை அனுப் உன்னிகிருஷ்ணன்(24), குணவத் (23) ஜெயேஷ் (23) என்ற மூன்று பேர் உருவாக்கியுள்ளனர்.

இந்த அப்ளிகேசனை இங்கே டவுன்லோட் செய்யலாம்

இந்த அப்ளிகேஷன் அனைவருக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள், பிடிச்சிருந்தா லைக்குங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Sunday, 30 December 2012

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!
இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியேபுகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்!
ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்?
ஜிமெயிலில் பழைய மெயில்களை தேடும் வசதி இருப்பதால் கடந்த கால மெயில்களில் தேடிப்பார்க்கலாம்.இருந்தாலும் ஒவொரு மெயிலாக தேடி அதில் புகைப்படம் இருக்கிறதா என்று பார்த்து அவற்றை சேமித்து வைப்பது என்பது தலை சுற்ற வைத்துவிடும் தான்.
இப்படி இமெயிலில் புதைந்த பழைய புகைப்படங்களை தேடி எடுக்கும் எண்ணமோ தேவையோ ஏற்பட்டால் உதவுவதற்காக என்றே ஒரு இணையசேவை உருவாக்கப்பட்டுள்ளது.
லாஸ்ட்போட்டோஸ் என்னும் பெயரிலான அந்த சேவை இமெயில் தொலைந்த புகைப்படங்களை மீண்டும் தேடி எடுக்க உதவுகிறது.
வின்டோஸ் சார்ந்த செயலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையை லாஸ்ட்போட்டோஸ் தளத்தில் இருந்து டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டு பாஸ்வேர்டையும் குறிப்பிட்டு உள்ளே நுழைய அனுமதித்தால் இந்த சேவை கடந்த கால இமெயில்களில் அனுப்பிய மற்றும் வந்து சேர்ந்த புகைப்படங்களை எல்லாம் தேடி எடுத்து அழகாக தொகுத்து தந்து விடும்.
சில புகைப்படங்கள் அளவில் சின்னதாக,தம்ப்நைலாக மட்டுமே இருக்கும்.அத்தகைய புகைப்படங்களை தேட வேண்டாம் என்று வடிக்கட்டச்சொல்லும் வசதியும் இருக்கிறது.அதே போல குறிப்பிட்ட வடிவிலான புகைப்பட கோப்புகள் தேவை இல்லை என்றோ குறிப்பிட்ட காலத்திற்கு முன் வந்த படங்கள் தேவை இல்லை என்றோ வடிக்கட்டிக்கொள்ளலாம்.
புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் போதோ அந்த படங்கள் உங்கள் டெஸ்க்டாப்பிலும் காண்பிக்கப்படும்.
அந்த படங்களை அப்படியே கிளிக் செய்து பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற சேவைகள் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கும் டிவிட்டரும் இப்போது தானே பிரபலமாகி இருக்கின்றன.பேஸ்புக் வருவதற்கு முன் இமெயிலில் தானே பெரும்பாலும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருப்போம்.அப்படி பகிர்ந்து கொண்டு மறந்து விட்ட படங்களை இப்போது தேடி எடுத்து பேஸ்புக்கில் பகிர்வது அருமையானது தானே.
இந்த புகைப்படங்கள் எல்லாம் உங்கள் டெஸ்க்டாப்பிலும் சேமித்து வைக்கப்படும்.அவற்றை அழகாக கோப்புகளில் பிரித்து வைத்துக்கொள்ளலாம்.
ஜிமெயில் உட்பட பல்வேறு இமெயில் கணக்குகளில் இந்த சேவை செயல்படுகிறது.
இமெயிலில் அனுப்பிய புகைப்படங்களை மீட்டெடுக்க விரும்புகிறவ‌ர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.அதே போல புகைப்படங்கள் வாயிலாக கடந்த கால நினைவில் மூழ்க நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படங்களை மீட்டெடுப்பதோடு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் கைகொடுப்பது இந்த சேவையின் சிறப்பம்சம்.
புகைப்படம் சார்ந்த சேவைகளில் மேலும் ஒரு பயனுள்ள சேவை.
இணையதள முகவரி;http://lostphotosapp.com/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Sunday, 9 December 2012

சிறுவர்களுக்கான நவீன பாதுகாப்பான தேடியந்திரங்கள்

இன்றைய நவீன காலகட்டத்தில் 6 வயது முதலே இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
எனவே சிறுவர்களுக்கு ஏற்றாற் வகையில், பல தேடியந்திரங்கள் உள்ளன.

Aga-Kids

இந்த தேடியந்திரம் கொஞ்சம் விஷுவலானது. அதாவது படங்களாக தகவல்கள் தேவையா என்றும் தீர்மானித்து கொள்ளலாம்.

தேடுவதற்கு முன்பே தவல்கள் சாதாரணமாக தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாக (விஷுவலாக)தோன்ற வேண்டுமா என தெரிவு செய்து கொள்ளலாம்.

இதை தவிர கார்ட்டூன், விளையாட்டுகள், பொம்மை செய்தல் ஆகிய தனிப்பகுதிகளும் இருக்கின்றன. இணையத்திலேயே வரைவதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது.

அது மட்டும் அல்ல தேட கட்டத்திற்கு மேலேயே பல குறிச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.

http://aga-kids.com/

Kidrex.org

இதே போலவே கிட்ரெக்ஸ்.ஆர்ஜி என்னும் தேடியந்திரம் அழகான டைனசோர் படத்தோடு வரவேற்கிறது.

இந்த தேடியந்திரம் கூகுளை பயன்படுத்தி சுட்டீஸ்களுக்கு பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது.

இதில் குழந்தைகளுக்கு என்று தனிப்பகுதியும் பெற்றோர்களுக்கு என்று தனிப்பகுதியும் இருக்கிறது.

குழந்தைகளுக்கான பகுதியை கிளிக் செய்தால் குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களை பார்க்கலாம்.

http://www.kidrex.org/

KidsClick.org

கிஸ்கிளிக்.ஆர்ஜி தேடியந்திரம் சிறுவர்களுக்காக என்று நூலகர்களால் உருவாக்கப்பட்டது. எனவே ஹோம் ஒர்கிற்கு தேவையான தகவல்களை இதில் தைரியமாக தேடலாம்.

http://kidsclick.org/

Ask Kids

ஆஸ்க்கிட்ஸ் தேடியந்திரத்தில் எந்த சந்தேகத்தையும் கேள்வியாக கேட்டு தேடலாம். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கான பதில்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம்.

http://www.askkids.com/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Disk Cleaner மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

Disk Cleaner மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

தொடர்ச்சியான கணனிப் பாவனையின் மூலம் வன்றட்டில் பல்வேறு வகையான பாவனைக்கு வேண்டப்படாத கோப்புக்கள் தங்குகின்றன.
இதனால் வன்றட்டின் செயற்படு வேகம் குறைவடைந்து கணனியின் வேகமும் மந்தநிலையை அடைகின்றது
.

இதனை தவிர்க்கும் பொருட்டு வன்றட்டில் காணப்படும் வேண்டப்படாத கோப்புக்களை நீக்குவதற்காக வெவ்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

அவற்றுள் Disk Cleaner மென்பொருளும் ஒன்றாகும். 805 KB கோப்பு அளவு கொண்ட இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் இதில் Portable பதிப்பும் கிடைக்கின்றது.

இதன் மூலம் Firefox, Chrome, Internet Explorer, 7-Zip, Flash Player ஆகியவற்றில் உள்ள தற்காலிக கோப்புக்களை நீக்க முடிவதுடன் தேவையற்ற கோப்புறைகளையும் நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்க சுட்டி..
http://garr.dl.sourceforge.net/project/portableapps/Disk%20Cleaner%20Portable/DiskCleanerPortable_1.7.1645_English.paf.exe

தரவிறக்க சுட்டி...
http://citylan.dl.sourceforge.net/project/dclean/dclean/1.8.1795/dcsetup_1.8.1795.exe

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Saturday, 1 December 2012

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Thursday, 29 November 2012

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை
ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....

Sunday, 18 November 2012

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

Friday, 2 November 2012

தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி

தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி
?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமாமுடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer காணப்படுகின்றது .

Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும்அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும்Team Viewer 7.0. (http://download.cnet.com/TeamViewer/3000-7240_4-10398150.html?part=dl-6271747&amp%3Bsubj=dl&amp%3Btag=button)
இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியைஇணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

இதில் இரண்டு வசதிகள் உள்ளன. இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய முடியும் . இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும்உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.

இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.

இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?

முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும்அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக மிக அவசியம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Wednesday, 5 September 2012

இ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?தமிழன்டா

நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கி
றது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால்இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பானஇமெயில்' அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்..டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரதுஇமெயில்' பயணத்தைhttp://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார் !!!

ஒரு சாதனைத் தமிழனை ,
அவமதித்த இந்தியா
அரவணைத்த அமெரிக்கா!
நம்முள் எத்தனை பேருக்கு இவரை தெரியும் ? SHARE செய்து பெருமை சேர்ப்போம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்